வங்கி வாடிக்கையாளர்களே உஷார்….
நாடு முழுவதும் இன்று பெரும்பாலான மக்கள் அஞ்சலக வங்கி கணக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் மோசடிகள் நடைபெறுவதும் பலர் ஏமாற்றப்படுவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களின் பெயர்களில் போலீஸ் கணக்குகளை தொடங்கி மோசடி செய்பவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தெரியாத நபர்களுக்கு பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கு உண்மையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் பல்வேறு இணைய குற்றங்களில் சட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக இந்திய அஞ்சலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் வங்கி கணக்கு தொடங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மூன்றாம் நபரின் மொபைல் எண்ணை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. பரிவர்த்தனையின் உண்மை தன்மையை அறியாமல் எந்த பணத்தையும் ஏற்கவோ அல்லது அனுப்பவோ கூடாது.
No comments