• Breaking News

    மது,போதை ஒழிப்பிற்கான போராட்டம் ஒத்திவைப்பு: சரத்குமார் அறிவிப்பு

     

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று மது மற்றும் போதை ஒழிப்பிற்கான போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் ச.ம.க.வின் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் அறிவித்துள்ளார். போராட்டத்திற்கு காவல்துறை சென்னையில் மட்டும் அனுமதி வழங்கி, பிற இடங்களில் அனுமதி வழங்க மறுத்த காரணத்தால் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், நீதிமன்றத்தை நாடி முறையான அனுமதி பெற்று அனைத்து இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    No comments