நாகுடியில் பாஜக ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமையில் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் கைது செய்ததை கண்டித்து கொட்டும் மழையில் சாலை மறியல்
திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய் வழக்கு போட்டு உளளதாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி கடைவீதியில் அறந்தாங்கி பாஜக ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு அவ்வழியாக அந்த பேருந்தை மரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்த சாலைமறியல் புரட்சி கவிதாசன் , மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் முரளிதரன், மாநில செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி, முன்னிலையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பாஜக கலந்து கொண்டு திமுகவிற்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பினர்.நாகுடி காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்
No comments