• Breaking News

    என் உடல் எடை குறித்து மற்றவர்களுக்கு ஏன் கவலை? மஞ்சிமா மோகன் கேள்வி

     

    நடிகை மஞ்சிமா மோகனும் நடிகர் கவுதம் கார்த்திக்கும் கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். நடிகை மஞ்சிமா உடல் எடை அதிகரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் அவரை கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில் திருமணத்தின் போதும் அவர் எடை குறித்து பலர் கேலி செய்துள்ளனர்.

    இதுபற்றி மஞ்சிமா மோகன் கூறும்போது, “என் திருமணத்தின் போது கூட சிலர் என் உடல் எடை குறித்து கருத்துத் தெரிவித்தனர். நான் உடல் தகுதியுடன் இருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். என் வேலை தொடர்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அதைச் செய்வேன். இதுபற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை?” என்று கேட்டுள்ளார்.

    No comments