• Breaking News

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்றது

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தினர்.பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் AGAMT 2021-2022 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ குழு மூலமாக மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பதிவு, வங்கி கடன் உதவி, உதவி உபகரணங்கள் அடையாள அட்டைகள், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு,UDID அட்டைகள்,OAP (SSS) உதவி உபகரணங்கள்,பராமரிப்பு உதவித் தொகை,கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் பிறத்துறை உதவிகள் வழங்குவதற்கான வட்டார அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள்,

    செவித்திறனாளிகள் என இருநூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு புதிய அடையாள அட்டை பதிவு செய்தல், பதிந்த அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுதல்,மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பதிவு செய்தல் போன்ற அடையாள அட்டைகளை பதிவு செய்தனர்.

    இந்நிகழ்வில் தனி வட்டாச்சியர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜு, குமரன், 

    எலும்பு முறிவு டாக்டர் நெடுங்கிளி, மனநல மருத்துவர் அஜய், காது,மூக்கு,தொண்டை மருத்துவர்  பிரவர்த்தனா,கண்மருத்துவர் டாக்டர் அகல்யா, மாற்றுத்திறனாளிகள்  அலுவலர்கள், பணியாளர்கள், சமூகநல அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

    இரா.பாஸ்கர் செய்தியாளர்


    No comments