• Breaking News

    கொன்னையூர் அம்பாள் மெட்ரிக் பள்ளி சார்பில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளி ரதம் இழுத்து சிறப்பு வழிபாடு

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அம்பாள் மெட்ரிக் பள்ளி சார்பில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

    கொன்னையூரில் உள்ள அம்பாள் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தொடங்குவதற்கு அனுமதி வழங்கியதை முன்னிட்டு அம்மாள் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் சாந்தி தலைமையில் ஸ்ரீ கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளி ரதம் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.இதில் அப்பள்ளி ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இரா.பாஸ்கர் செய்தியாளர்

    No comments