இன்றைய ராசிபலன் 04-12-2022
மேஷம் ராசிபலன்
கூட்டத்தில் தனியாக இருப்பது போல உணர்கிறீர்களா? அது நீங்கள் வாழ்க்கையில் சமாளிக்க வேண்டிய ஒன்று தான். புதிய நட்பைப் பெற நீங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். இதனால், உங்களுக்குத் தடுமாற்றம் ஏற்படலாம். பரபரப்பான மற்றும் மகிழ்ச்சியான நடவடிக்கைகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. இந்த நாளில், உங்களுக்காக வரிசையாகக் காத்திருக்கும் இன்பமான செயல்களை நிதானமாக அனுபவியுங்கள். மோசமான எண்ணங்களை விட்டுவிட்டு, ஆனந்தத்தைச் சிறந்த முறையில் அனுபவியுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
உங்களைப் பற்றித் தாழ்வாக எண்ண வேண்டாம். பல வழிகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் திறந்த மனதுடன் இருங்கள், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் அல்லது மனம் தளரலாம். இந்த கடினமான கட்டத்தைக் கடந்து செல்ல அவர்களுக்கு உதவுவது உங்களின் கடமையாக இருக்கும். அவர்களுடனான தகவல் தொடர்பு , அவர்களின் திறமைகள் இன்று உங்களுக்கு உதவும்.
மிதுனம் ராசிபலன்
உங்கள் மனதில் குழப்பம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அது இன்று முடிவுக்கு வர வேண்டும். சந்தேகங்ளும், குழப்பங்களும் உண்மையான சந்தோசத்தின் எதிரியாகும். கோபப்படும் இயல்பு காரணமான நீங்கள் சில நண்பர்களை இழந்துவிட்டீர்கள். பருவகால ஒவ்வாமை உங்களை எளிதில் பாதிக்கும். உங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை, மேலும் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்கும் விஷயங்களில் மிகக் குறைவான கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
கடகம் ராசிபலன்
உங்கள் உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இயங்குகின்றன. மேலும், நீங்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். மனஅழுத்தம் என்பது உங்கள் சக்தியை பெருமளவில் வீணடிக்கும் ஒரு நிலை ஆகும். உங்கள் நிலையினை தாழ்த்தும் செயல்களை வேறுபடுத்தி, அதனை புரிந்துகொள்ளுங்கள். இது கடந்த காலங்களில், நீங்கள் மற்றவர்களுக்கு செய்த தவறுகள், அல்லது ஏமாற்றம் சார்ந்தவையாகக் கூட இருக்கலாம். அத்தகைய சிக்கல்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நீங்கள் கண்டறியுங்கள்.
சிம்மம் ராசிபலன்
உங்கள் மனதில் பட்டாம்பூச்சி பறக்கிறதா? மோகம் உங்களைத் தாக்கலாம், ஆனாலும், உங்களை பற்றிய அறிவார்ந்த முறையில் சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கு வயதாகி வருவதை நீங்கள் காண்கிறீர்களா அல்லது உங்கள் தோல் சுருங்கி விட்டதா? மனதில் தோன்றுவதை வாங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், சிக்கல் இல்லாத வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டால், நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.
கன்னி ராசிபலன்
வருத்தம் என்பது உங்களிடம் இருந்து வெளியேற வேண்டிய ஒன்று. உங்கள் அமைதியைக் குலைக்கும் ஒரு கடினமான உறவோடு நீங்கள் சமாதானமாக இருக்க வேண்டும். உங்கள் அறிவையும், திறமையையும் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் உங்கள் உள்ளுணர்வைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது மன அழுத்தத்தைக் குறைக்க இன்று ஒரு வழியைத் தேட வேண்டும். நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்யுங்கள் - பயணங்களை மேற்கொள்ளுங்கள், நண்பர்களுடன் பேசுங்கள் அல்லது சோம்பேறித்தனத்தை விட்டு குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள்.
துலாம் ராசிபலன்
உங்கள் மந்தமான நாட்களை ஒதுக்கி வைத்து விட்டு, ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள். உண்மையில் நீங்கள் சில பாராட்டுகளுக்காக ஏங்கலாம். மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட சுய மதிப்பீடு மிகவும் முக்கியமானது. உங்கள் கலை திறமைகளை இன்று வெளிப்படுத்துங்கள். இது சக ஊழியர்களிடம், உங்களைத் தனியாகக் காட்டி விடும். உங்கள் கவனங்கள் அனைத்தையும் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் நண்பர்களால் உங்களுக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படும் என்றாலும், அவர்களைக் கண்மூடித்தனமாக நம்புவது நல்ல நடவடிக்கை அல்ல.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் ஒழுங்காக உள்ளன. ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிகளைப் பற்றிச் சிந்திக்க இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். நீங்கள் நம்புவதைச் செயல்படுத்தப் பயப்பட வேண்டாம். நீங்கள் சில புதிய யோசனைகளைக் கொண்டு வரலாம். ஒழுக்கம் உங்கள் மனதிலிருந்தால், நீங்கள் உங்கள் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை தூக்கி எறிந்து விடலாம். இந்த சூழல், உங்கள் கைகளை மட்டுமல்ல, உங்கள் மனதையும் விடுவிக்கும்.
தனுசு ராசிபலன்
நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் சமிக்ஞைகளை விட்டுவிடுகிறீர்கள். ஆனால், இன்று நீங்கள் பெறும் பலவிதமான சமிக்ஞைகளால் மிகவும் குழம்பிப் போயுள்ளீர்கள். ஒருதலையான காதல் மிகவும் காயப்படுத்துகிறது. சில தவறான புரிதல்களை மாற்றியமைக்க இந்த நேரத்தை உபயோகித்துக் கொள்ளுங்கள். சில சாதகமான கிரக மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆதலால், இப்போது நீங்கள் சிலவற்றை புதிதாக தொடங்க இது ஒரு நல்ல தருணம் ஆகும். அவசரகோலத்தில் முடிவுகளை எடுப்பதைத் தவிருங்கள். அதிலும் குறிப்பாக, நிதி சம்மந்தமானவைகளில் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
மகரம் ராசிபலன்
குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள் போன்றோர் உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் பொறுப்புகள் அல்லது கவலைகளைப் பகிர்ந்து கொண்டு இன்று உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். குறைவாகக் கவலைகொண்டு, அதிக நேரம் தியானம் செய்யுங்கள். மக்கள் உங்கள் மீது காட்டும் அன்புக்காக அவர்களைப் பாராட்டுங்கள். இன்று உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள். இது நீங்கள் நினைப்பதை விட, உங்களுக்கு அதிகமாக தேவைப்படும்.
கும்பம் ராசிபலன்
சமீப காலமாக நீங்கள் மனச்சோர்வடைந்து உள்ளீர்கள். நீங்கள் முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை என உணர்கிறீர்கள். உங்களைப் பழைய படி மாற்றிக் கொள்ளச் சிறிது நேரம் தேவைப்படும். அது குறித்து நீங்கள் இன்று முடிவு செய்ய வேண்டும். முக்கிய விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். மெதுவாக, ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு செயல்படுத்துங்கள். பல விஷயங்கள் உங்களைப் பாதிக்கும். உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும். உங்களை மீண்டும் பழைய பாதைக்குக் கொண்டு வர உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெறுங்கள்.
மீனம் ராசிபலன்
அமைதியாக அமர்ந்து கொண்டு மூச்சை இழுத்து விடுங்கள். கோபம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவும், உடனடி வெளிப்பாடாகவும் இருப்பதுஉங்களுக்குத்தெரியும்.உங்கள் மனநிலையை அடக்கி ஆளாமல் விட்டு விட்டால், அது உங்கள் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து வகையான மனக்கசப்பையும், அதிருப்தியையும் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.உங்களைப்பாதிக்கும்பிரச்சினைகளைக்கண்டறியவும். இன்று, உங்கள் நண்பரிடமிருந்தோ அல்லது உங்களுடைய சரியானகூட்டாளரிடமிருந்தோநீங்கள் ஆறுதலையும் தீர்வுகளையும் பெறுவீர்கள். கோபத்தினால் நீங்கள் செய்யும் தவறுகளை எவ்வாறு தடுப்பது என்று, உங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய நபர்களிடமிருந்துபதிலைப்பெற்றுக் கொள்ளுங்கள்.
No comments