மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி ஊராட்சி கன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 50 வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மிகுந்த அளவில் சேதமடைந்து பழுதடைந்து கம்பிகள் தெரியும் வண்ணம் காரைகள் உடைந்து காணப்படுகின்றது. மேலும் சில மின்கம்பங்கள் சாய்ந்த வண்ணம் உள்ளது.
இந்த மின்கம்பங்களின் வழியாக செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால் ஆள் தொடும் அளவில் மின் கம்பிகள் சொல்கிறது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இங்கு உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த வண்ணம் உள்ளதாகவும் இதனால் நேற்று முன்தினம் மின் கம்பிகள் அறுந்ததால் வீட்டின் கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கப்பட்டு இப்பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா வயது 50 மற்றும் ராஜாத்தி வயது 22 ஆகிய இருவர் குத்தாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மேலும் பகுதியில் மின்னழுத்தம் காரணமாக டிவி, பிரிட்ஜ், கிரைண்டர், மின்சார அடுப்பு உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்ததாகவும் கவலை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பங்கள் மின் கம்பிகள் உள்ளிட்டவற்றை சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments