கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தேர்தல் பொறுப்பாளர் அழகிரி சதாசிவம் ஆய்வு


 கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த 15 வார்டுகளை சேர்ந்த வாக்காளர்களுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் இன்று நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி கே.எல்.கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாபொசி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் நடைபெற்ற இந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும், வாக்காளர் பட்டியல் நீக்கம், பெயர் திருத்தம்  உள்ளிட்ட பணிகள்  முகாமில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி கேஎல்கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் வாக்காளர் பட்டியல் திருத்த  பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை நேரில் சென்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் தேர்தல் பொறுப்பாளர் அழகிரி சதாசிவம் ஏ.வி ராமமூர்த்தி.நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள் உடன் ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன் கே.வி ஆனந்தகுமார் திமுக நகர செயலாளர் அறிவழகன் மாவட்ட பொருளாளர் ரமேஷ் திமுக சார்பில் பாக முகவர்களான டி.கே.ராஜா, சரண்ராஜ், ரமேஷ் மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி தீனதயாளன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .   

இதைத் தொடர்ந்து புது. கும்மிடிப்பூண்டி தொடக்கப்பள்ளியில் வாக்காளர் முகாம்.ஆய்வு நடத்தினர் மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் தேர்தல் பொறுப்பாளர் அழகிரி சதாசிவம் ஒன்றிய செயலாளர் கே.வி ஆனந்தகுமார்.ஏ.வி ராமமூர்த்தி. கவுன்சிலர் ஜோதி.பாகம் முகவர்கள் மணிகண்டன் எட்டியப்பன் சதீஷ் லோகேஷ் குமரேசன் அசின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments