தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் விஜய் நிகழ்த்திய உரை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தவெக தயாராகி வருகிறது.
இந்நிலையில் கட்சியை அனைத்து நிலையிலும் பலப்படுத்தும் நோக்குடன் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி நெல்லையில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 நாட்கள் தங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், விக்கிரவாண்டியை போல நெல்லையிலும் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments