மழைக்காலங்களில் ஏற்படும் நோய் தொற்றுகளை தடுக்க திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டு பகுதிகளிலும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு சி ஹெச் பி காலனி பகுதியில் அனைத்து பகுதிகளிலும் புகை மருந்து மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது இந்த பணிகளை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆய்வு செய்தார்.நிகழ்ச்சிகள் அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரி, புவனேஸ்வரி உலகநாதன், மனோன்மணி சரவணன் முருகன், ராதா சேகர், செல்வி ராஜவேல், சண்முகவடிவு, திவ்யா வெங்கடேஸ்வரன், செல்லம்மாள் தேவராஜன்,தாமரைச்செல்வி மணிகண்டன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர் நோய் தொற்றுகள் பரவாமல் தடுக்கும் பணிகளை திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகளும் களப்பணியாளர்களும் பொறுப்புணர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார்.
ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்
0 Comments