திருச்செங்கோடு நகராட்சி சூரியம்பாளையம் பகுதியில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில்தலைமை வகித்தார்.மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி,திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் மாவட்ட அவைத்தலைவர் நடன சபாபதி நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் அடுப்பு ரமேஷ் அறங்காவலர் குழு உறுப்பினர் பிரபு, அருணா சங்கர்,முன்னாள் நகர துணை செயலாளர் ராஜேந்திரன்ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தது.மாவட்டம் தோறும் நூலகம் திறக்கும் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நூலகம் ஆக்கபூர்வமாக பகுத்தறிவு சுயமரியாதை வளர்க்க உதவும்,அறிவை விரிவு செய்வோம் அகண்டமாக்குவோம்அகிலத்தை திராவிடமயமாக்குவோம் என திராவிடர் கழக தலைவர் வீரமணி பார்வையாளர் புத்தகத்தில் எழுதினார்.
ஜெ.ஜெயகுமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்
0 Comments