இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசியதால் இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. விஜயின் வருகை இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உதவியாகவே இருக்கும். விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது.. ராகுல் காந்தி வந்தபோது அதிக கூட்டம் கூடியது.
கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை. அவர்கள் தான் முடிவெடுப்பார்கள். 2006ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்றைக்கு தமிழக முதல்-அமைச்சராக கலைஞர் இருக்கவேண்டும் என நிபந்தனை இன்றி ஆதரவு கொடுத்தார் சோனியா காந்தி. அன்றைக்கு ஒருவேளை எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டிருந்தால் தி.மு.க. கொடுத்திருக்கும். மக்கள் தரும் முடிவை பொறுத்து ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்து பரிசீலிக்கப்படும்.
டிசம்பர். 5-க்கு பிறகு காங்கிரஸ் கிராம கமிட்டிகள் சீரமைக்கப்படும். கிராம மக்களின் பிரச்சினைகளை கண்டறிய இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
0 Comments